தகவல் - நபீல் நயீல்.
சம்மாந்துறையில் உள்ள வியாபாரிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (2018-3-2) சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசல் மேல்மாடியில் இடம் பெற்றது.
சம்மாந்துறையில் உள்ள வர்த்தகர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு உயிரோட்டமுள்ள அமைப்பாக உருவாக்கி அதனுாடாக வியாபார நடவடிக்கைகளில் ஒற்றுமைத் தன்மையை பேணுவதனை நோக்காகவும், சமூகத்தின் தேவை கருதி ஊர் உயர் சபைகள் மேற்கொள்ளும் தீர்மானங்களில் பங்காளர்களாக ஆகுவதனை நோக்காகவும், இயலுமானவரை சமூக சேவைகளிலும் பங்கெடுத்துக் கொள்வதனை நோக்காவும் கொண்டு புதிய வர்த்தக சங்கம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் சம்மாந்துறையில் உள்ள வர்த்தகர்கள் எல்லோரும் ஆர்வத்துடன் வருகை தந்து தங்களது கருத்துக்களையும் தெரிவித்ததோடு, தங்களால் ஆன சமூகப் பங்களிப்புக்களையும் வழங்குவதாக தெரிவித்தார்கள்.
நேற்றைய கூட்டதில் தற்காலிகமாக 3 மாதற்திற்கு உட்பட்ட நிர்வாக குழுவொன்று உருவாக்கப்பட்டு அதற்கு தலைவர்,பொருளார், செயலாளர்கள் போன்றோர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.