ஒரே முறையில் குடிப்பதன் மூலம் ஆணுக்கோ பெண்ணுக்கோ மலட்டு தன்மையை ஏற்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று அரச வைத்திய சங்கத்தின் உப தலைவரும், மகரகம தேசிய புற்றுநோய் வைத்திய சாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான Dr சாரத கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று பிரபல ஆங்கிலப் பத்திரிகையான (02/03/2018) Daily News க்கு கருத்துத் தெரிவித்த அவர், உணவில் கருத்தடை மாத்திரைகளை கலத்தல் பற்றிய பீதி விஞ்ஞான அடிப்படை அற்றது என கூறி மறுப்பு தெரிவித்த அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
கருத்தரிப்பதை பாதிக்கும் விதத்தில் அமைந்துள்ள மக்கள் பெரிதும் சிந்தித்து விழிப்பாக இருக்க வேண்டிய நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் நாம் அன்றாடம் பாவிக்கும் பார உலோகங்களான கட்மியம், இரசம் போன்றவை கருவுருவதை வெகுவாகப் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆராய்ச்சிகள் மூலம் தொடர்தேட்சியான பார உலோகங்களை பாவித்தல் இனப்பெருக்கத்தை பாதிக்கும் என கண்டறியபட்டுள்ளது என்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் (BPA) ஆண்களில் மலட்டு தன்மையைப் பாதிக்கும் என்றும் அவ்வாறான போத்தல்கள் சூரிய ஒளியில் படும்போது அதன் பாதக தன்மை இன்னும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் பல்வேறு பட்ட உணவுச் சேர்மானங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை உணவுகள், மென்பானங்கள் (Soft drinks) பல்வேறு வகையான souce வகைகள் போன்றவற்றின் பாவனைகள் மலட்டு தன்மைக்கான வாய்ப்பை அதிகரிக்கும் மலட்டு தன்மை மாத்திரம் அல்ல கருக்கலைப்பு (abortion) க்கான வாய்ப்பையும் அதிகரிக்கும் என்றும் இவைகள்தான் மக்கள் மிகவும் அவதானம் செலுத்த வேண்டிய மிக முக்கிய பிரச்சினைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணவில் கலக்கப்பட்டு அது மறுநாளே ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ மலட்டுத்தன்மை ஏற்படுத்தக் கூடியதான எந்த மருந்தும் இல்லை என்பதை அவர் ஆணித்தரமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அரச வைத்திய சங்கத்தின் உப தலைவரும், மகரகம தேசிய புற்றுநோய் வைத்திய சாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான Dr சாரத கண்ணங்கர அவர்கள் டெய்லி நிவுஸ்சுக்கு தெரிவித்த கருத்துக்களின் லிங் கீழே இணைக்கப்பட்டள்ளது.
தமிழாக்கம் - Dr. Ziyad.