சம்மாந்துறை கைகாட்டிக் குளத்தை அண்டிய பிரதேசத்தை பொழுதுபோக்கு தளமாக மாற்ற சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக தவிசாளர் குழுவினர் சம்மாந்துறை கைகாட்டிக் குளத்துக்கு விஜயம் செய்து அது தொடர்பான கலந்துரையாடல்களில் நேற்று ( 2018-04-18) ஈடுபட்டனர்.
இவ் விஜயத்தில் அம்பாரை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் நிஹால் சிறிவர்த்தன மற்றும் சம்மாந்துறை நீர்பாசன பொறியிலாளர் நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.