சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் 2018.04.22 பிற்பகல் 2 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் கழக தலைவர் திரு. ஜோ. டிசாந்தன் தலைமயில் நடைப்பெற்றது.
நிகழ்வின் முதற் கட்டமாக இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியானது வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தின் நுழைவாயிலில் இருந்து மல்வத்தையை சென்றடைந்து மீண்டும் வீரமுனை மைதானத்தை வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.
இதில் முதலாம் இடத்தினை சனுஸ்காந் அவர்களும் இரண்டாம் இடத்தினை துசாந்த அவர்களும் மூன்றாம் இடத்தினை சதுர்சனும் பெற்றுகொண்டனர்.
நன்றி - வீரமுனை இணையம் மற்றும் Saranjan Saravanamuththu
புகைப்படங்கள்- ச. சரன்ஜன்