Ads Area

சம்மாந்துறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.


எம்.வை.அமீர் -


திருகோணமலை  சண்முகா தேசியப்பாடசாலையில் பணிபுரியும் முஸ்லிம் ஆசிரிகைகள் அணியும் அபாயாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஸ்ரீலங்காதௌஹீத் ஜமாஅத்தின் அம்பாறை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த கண்டன பேரணி 2018-04-27 ஆம் திகதி சம்மாந்துறை ஹிஜ்ரா சாந்தி சுற்றுவட்டத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.



ஜும்ஆ தொழுகையைத்  தொடர்ந்து ஒன்றுதிரண்ட முஸ்லிம் ஆண்களும் பெண்களுமாக சண்முகா தேசியப்பாடசாலையின் அபாயா எதிர்ப்புக்கு எதிராய் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாய் சென்றனர்.







இவர்கள் “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் சண்முகா மகளிர் கல்லூரி அதிபரை கண்டிக்கிறோம்”, “தூண்டாதே  தூண்டாதே இனவாதத்தை தூண்டாதே”, “சீர்குலைக்காதே சீர்குலைக்காதே தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்காதே”,”உரிமை காக்க பொங்கியெழுவோம் சட்டம் தந்த உரிமையை தட்டிப்பறிக்க நீ யாரடா?” என்பனபோன்ற கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe