திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் இணைய வானொலி ஆஸாத் எப்.எம் இன் ஓராண்டு நிறைவையொட்டி சம்மாந்துறை வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே கலைத் திறமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடாத்தப்பட்ட திறனொளியின் திறமைக்கான தேர்வு விருது வழங்கும் கலை கலாசார இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ், விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.
திறனொளி கலா மன்ற அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், ஆஸாத் எப்.எம். இணைய வானொலியின் பணிப்பாளரும், திறனொளி சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாத் அவர்களின் நெறிப்படுத்தலுடன், அமைப்பின் நிருவாக உறுப்பினரும் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.சி.எம்.காலித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஆஸாத் எப்.எம் இணைய வானொலியின் ஸ்தாபகரும் திறனொளி கலா மன்ற அமைப்பின் போஷகருமான நாசிருல்ஹக் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர். சிறப்பு அதிதிகளாக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் தேசகீர்த்தி றஸ்மி மூஸா, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பரீனா, முன்னாள் பல்கலைக் கழக பதிவாளர் கலைஞர் மன்சூர் ஏ காதிர், திறனொளி வலையமைப்பின் ஆலோசகரும் கலாசார அதிகார சபையின் உபதலைவருமான மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மாறன் யூ ஸெயின், திறனொளி கலா மன்ற ஆலோசகரும் முன்னாள் மஜ்லிஷ் அஷ்ஷூறாவின் தவிசாளருமான கலாபூஷணம் அல்-ஹாஜ் எஸ்.அப்துல் றாஸீக் (ஜே.பி), அதிதிகளாக ஓய்வு பெற்ற சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.உதுமாலெவ்வை, பிறை எப்.எம் அறிவிப்பாளர்கள் எஸ்.எம்.ஜவாத், ராஜகவி றாஹில், சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன தலைவர் ஏ.ஜே.காமில் இம்டாட், நிஹோன் லங்கா ட்ரேடிங் கம்பனி முகாமையாளர் கலை ஆர்வலர் ஏ.ஆர்.எம்.றியாஸ்தீன், சபீனா குறூப் முகாமையாளர் சமூக அர்வலர் சபீக் இஸ்மாயில், ஈஸ்டன் ஜூவலரி முகாமையாளர் கலாநிதி இஸட்.ஏ.பஸீர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய பெருந்தகைகள், சிரேஷ்ட இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஏழத்தாளர்கள் கலைஞர்கள், கல்விமான்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், திறனொளி அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் போட்டியில் நடுவர்களாகக் கடமையாற்றியவர்களுக்கான நினைவுச் சின்னமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதோடு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நினைவுச் சின்னமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது. முதலாம் இடங்களைப் பெற்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. நிகழ்வுக்கு தமிழ்மிரர் பத்திரிகை ஊடக அனுசரனை வழங்கியிருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் திறனொளி சஞ்சிகை வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
(படப்பிடிப்பு: றுஸான் டிஜிடல் ஸ்றூடியோ)