சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினை (Past-Pupils-Association) மீள் புணர்நிர்மானம் செய்து பாடசாலையின் கல்வி, அபிவிருத்தி, ஒழுக்கம் போன்ற விடையங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாடசாலையை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்வதற்கு அமைய நேற்று (2018-05-06) ஞாயிற்றுக் கிழமை அல்-அர்ஷத் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகத்தினரை தெரிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது.
அல்-அர்ஷத் பாடசாலையின் அதிபர், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பழைய மாணவர்களின் வருகையோடு இடம் பெற்ற நேற்றைய நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் தற்போது அம்பாறை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிபவருமான அக்றம் மொஹமட் அவர்கள் பழைய மாணவர் சங்கத் (Past-Pupils-Association) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதே போல் செயலாளராக பாடசாலையின் பழைய மாணவர் முபீன் அவர்களும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவ சங்க (Past-Pupils-Association) நிர்வாகத்தினர் ஒரு நாட்டின் எதிர்கட்சி ஆளுங்கட்சி விடையத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுமோ அதே போன்று பாடசாலையின் கல்வி, ஒழுக்கம், சீர்த்திருத்தம், அபிவிருத்தி, கட்டுப்பாடு போன்ற விடையங்களில் கவனம் செலுத்தி பாடசாலை நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கி பாடசாலையின் அபிவிருத்திற்க்காக பாடுபட வேண்டும் என்பதே அப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்துப் பழைய மாணவர்களதும், பெற்றோர்களதும் பேரவாவாகும்.