Ads Area

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களை பதிவு செய்யும் நிகழ்வு.

சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற அன்பார்ந்த நண்பர்களே..!! சகோதரர்களே..!! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய நமது பெற்றோர் நமக்கு எவ்வளவு முக்கியமோ அது போல்தான் நமக்கு அகரம் கற்றுத் தந்து நாம் சிகரம் தொட காரணமாக இருக்கும் நமது பாடசாலையும் முக்கியமானது. அந்தப் பாடசாலையின் கல்வி-ஒழுக்கம் போன்ற அத்தனை விடங்களிலும் நாம் கவனம் செலுத்தி அதனை சீரிய பாதையில் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும்.

இதனடிப்படையில் சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றினைத்துப் பயணிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக அனைத்துப் பழைய மாணவர்களையும் பதிவு செய்யும் நிகழ்வு இன்று (07) காலை 8:30 மணியிலிருந்து  பாடசாலை முன்றலில் நடைபெற்று வருகிறது.

எனவே அனைத்து பழைய மாணவர்களும் தவறாது சமூகம் தந்து உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

குறிப்பு : இன்று மாலை 5:30 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

Photos - Phoenix Media, Sammanthurai












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe