தகவல் - மொஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
அனைத்துப் பாடங்களில் W சித்தி பெற்றாலும் தொடர்ந்தும் கற்கக் கூடிய கல்வி அமைச்சின் 7 ஆவது புதிய பாடப் பிரிவாக உருவாக்கப்பட்ட 13 ஆண்டு தொடர் கல்வித்திட்டம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு. மொஹமட் இஸ்மாயில் அவர்களின் வழிகாட்டுதலில் இடம் பெற்றது.
கல்வி அமைச்சின் 7 ஆவது புதிய பிரிவாக உருவாக்கப்பட்ட 13 வருட (தொழில் பிரிவு) உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்விப்பிரிவானது 2017ம் ஆண்டு 42 பாடசாலைகளில் உருவாக்கப்பட்டு இவ்வருடம் இரண்டாம் கட்டத்தில் சம்மாந்துறை கல்வி வலயத்திலேயே ஒரேயொரு பாடசாலையாக கமு/சது/சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயம் உள்வாங்கப்பட்டிருப்பது இப்பிரதேச மாணவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.
இக் கற்கை நெறியினை பயில விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 10.06.2018 ற்கு முன்னர் விண்ணப்படிவத்தினை பாடசாலை அலுவலகத்தில் பெற்று பூரணப்படுத்தி இப்பிரிவில் இணைந்து கொள்ளலாம்.
அனைத்து பாடங்களிலும் W சித்தி பெற்றாலும் இப்பிரிவில் கற்க முடியும் தகுதியான அனைத்து மாணவர்களும் இதன் பெறுமதியை உணர்ந்து பயன் பெற வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.