Ads Area

சம்மாந்துறைப் பிரதேச வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்கு பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க சம்மாந்துறை வீரமுனைப் பிரதேச வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு கிராமத்தின் முன்னோர்கள் பின்பற்றி வந்த மரபான பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

முன்னோர்கள் கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இடம்பெறும் போது, கிராமத்தில் சில விடயங்களை (மா இடித்தல், வெள்ளை கட்டுதல், தீட்டு உடையவர்களை ஆலயத்துக்கு அண்மையிலிருந்து விலக்கி வைத்தல், மஞ்சள் இடித்தல், பெண்கள் தலை விரிகோலமாக செல்லல், பொரித்தல், மங்களகரமான நிகழ்வுகளை வீடுகளில் நடத்துதல்) செய்யாமையினை மரபாக கொண்டிருந்தனர்.

அவ்விடயங்களை உற்சவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிராமம் மக்கள் அனைவருக்கும் சென்று மக்களுக்கு அறிவிப்பர்.

எனவே தான் வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினரும் இந்து சமய மரபை பேணுவோம் என்பதற்கிணங்க எமது முன்னோர்கள் கையாண்ட ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில் செய்யத்தகாதவை இவையென மாட்டு வண்டியினூடாக கிராமம் முழுவதும் சென்று அறிவித்தனர்.

நன்றி - வீரமுனை இணையம்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe