மிக நெடு நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட வீரமுனை பிரதான வீதியானது ஊர் மக்களினதும் கோயில் நிர்வாகத்தினதும் கோரிக்கைக்கு அமைய தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.
மழை காலங்களில் குறித்த வீதி ஊடாக போக்குவரத்துக்கள் மேற்கொள்வதில் மிகவும் நெருக்கடியாக காணப்பட்டது. இந்நிலையில், வீரமுனை இணையத்தளக் குழுவினரின் தொடர்ச்சியான சுட்டிக்காட்டல்களினாலும் பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கையினாலும் அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு தற்காலிகமாக இந்த வீதியினை புனரமைப்பு செய்து தந்தமைக்கு மக்கள் நன்றி நன்றி என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவ் வீதியானது புதிதாக நிர்மாணம் செய்ய பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.
நன்றி - வீரமுனை இணையம்.