தமிழ் நாட்டின் கலை-இலக்கிய அமைப்புக்களின் நகர்வுகளின் தாக்கத்தில் இலங்கை" எனும் தொனிப் பொருளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள 3 வார பயணமாக இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற சம்மாந்துறையின் இலக்கியவாதியும், வரலாற்று ஆய்வாளரும் மற்றும் சாரணியத் தலைவருமான திரு.ஜலீல் ஜீ அவர்கள் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ் நாட்டு மகாகவி மன்றத்தினரால் பட்டயம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.
நாளை 21-05-2018 சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள வாசுகி கண்ணப்பன் அரங்கத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள இப் பட்டயம் வழங்கும் நிகழ்வில் தமிழகத்தின் சிறந்த இலக்கிய மேதைகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் திரு.ஜலீல் ஜீ அவர்களுக்கு அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் முனைவர் இதய கீதம் இராமானுஜம் அவர்களால் பாராட்டுப் பட்டயம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள நிகழ்வுகளோடு தொடர்பான விடையங்களை அழைப்பிதழில் காணலாம்.