கலீல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முஹம்மட் இஸ்மாயில் பதவி பிரமாணம் செய்த பிற்பாடு முதல் தடவையாக சம்மாந்துறைக்கு மண்ணுக்கு விஜயம் செய்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை ஹிஜ்றா பள்ளிவாசல் முன்றலில் பெருந்திரளாக கலந்து கொண்ட சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பெரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
துஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌஸாத், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமிர் ரீஏ மற்றும் பள்ளிவாசல் தலைவர், பிரதேச செயலக செயலாளர் உட்பட பல பிரமுகர்களும் ஊரின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.