புனித ரமழான் மாத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மஜுட்புர கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் அரிசி பொதிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு நேற்று மஜூட்புர ஜூம்ஆ பள்ளிவாசல் பள்ளிவாலில் நடைபெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கலந்துகொண்டு பிரதேச மக்களுக்கு அரிசி பொதிகளை வழங்கிவைத்தார்.
இதன்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.எப்.அனவர், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட்,மஜீட் புர விவசாய சங்க தலைவர் எஸ்.எச்.சக்காப், ஜூம்ஆ பள்ளிவாசல் செயலாளர் சீ.வீ.வதூத், பொருளாளர் எம்.ஏ.சக்காப், மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.