அன்மையில் சம்மாந்துறை அல் – முனீர் பாடசலைக்கு திடீர் விஜயத்தினை மேற் கொண்ட சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் பாடசாலையில் உடனடி தேவையாக காணப்பட்ட குறைகளை கேட்டறிந்ததோடு நேரடியாகவும் பார்வையிட்டார்.
அதற்கு அமைவாக பாடசாலையில் மிக முக்கியமான குறைகளாக காணப்பட்ட வகுப்பறைக்களுக்கு தேவையான ஒரு தொகை மின் விசிரிகளை மாணவ செல்வங்களின் நலன் கருதி கடந்த வெள்ளிக்கிழமை 22.06.2018 உத்தியோக பூர்வமாக பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் நிருவாகத்திடம் கையளித்தார்.