சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களினால் தவிசாளர் அவர்களின் கனத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்மாந்துறையில் உள்ள தெரு விளக்குகள் அற்ற இருள் சூழ்ந்த வீதிகளுக்கு தெரு விளக்குகள் பொருத்தும் பணியும் மற்றும் பற்றைகாடாய் இருந்த வீதிகளை துப்பரவு செய்யும் பணியும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் சம்மாந்துறை சென்னெல் கிராமம் பகுதிகளில் சில பாதைகளுக்கு தெரு விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட உடங்கா 02 ம் பிரிவில் மக்கள் அதிகம் பயண்படுத்தும் வீதிகளும் துப்பரவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்து வைக்கப்பட்டது.