ஊடகப் பிரிவு.
அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன், புனித சங்கைக்குரிய ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது. இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்று , அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினை பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
நோன்பானது ஒவ்வொரு இஸ்லாமியனதும் புலனடக்கத்தையும், மனக் கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீக பயிற்சியாகும் வெறும் வயிற்றில் பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும்
இத்தகைய சிறப்பு பொருந்திய இந்த ரமழான் மாதத்தில் எமது ஊருக்கு ஒரு பாராளுமன்ற சிறப்புரிமை அந்தஸ்த்து அல்லாஹ்வின் உதவியால் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த பாராளுமன்ற உறுப்புரிமை எம்மண்ணுக்கு கிடைக்க எமது இரத்தங்கள் இரவு , பகல் பாராது பல தியாகங்களை செய்து அசத்தியத்திற்க்கு எதிராக போர் தொடுத்து பல சதிகளை தகர்த்து இவ்வுறுப்புரிமையினை பெற காரணமாக இருந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பொறுத்த மட்டில் எம் மண்ணில் கடந்த பாராளுமன்ற தேர்தலினுடாக பிரவேசித்து பல சாதனைகளை எம்மன்னில் செய்துகாட்டிய வரலாறு யாரும் மறக்க முடியாத ஒன்றாகும். கௌரவ தேசியத்தலைவர் அல் ஹாஜ் றிசாட் பதியுத்தீன் அவர்களின் தலைசிறந்த தலைமைத்துவத்தின் காரணமாக இன்று பல தரப்பட்ட சமூக முன்னெடுப்புக்களை முறையாக செயற்ப்படுத்தி வருவதை நாம் அறிய முடியும். எனினும் நாம் இன்னும் இந்தப் பயணத்தை முழுமையாக பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே அன்பார்ந்த இரத்தங்களிடம் நாம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் நாம் மாற்றம் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அம்மாற்றம் நாம் பெற்ற இந்த பாராளுமன்ற உறுப்புரிமையூடாகவே இன்ஷா அல்லாஹ் நிறைவேறும். இவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால் ஒவ்வொருவரின் முழுமையான ஆதரவு கண்டிப்பாக வேண்டும்.
எனவே எனக்கு கிடைத்த இந்த அமானித அதிகாரத்தினை முழுமையாக பிரயோகித்து என்னால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவேன். என்று இச் சங்கை பொருந்திய மாதத்தில் உறுதி மொழி அளிக்கிறேன்.