(எம்.எம்.ஜபீர்)
நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்புடன் சம்மாந்துறை பஸ்பெக் சமூக சேவைகள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம் சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸாலிஹீன் பள்ளிவாசலில் நடைபெற்றது.
நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்பின் செயலாளர் கியாஸ் ஏ.புஹாரி தலைமையில் நடைபெற்ற இப்தார் வைபத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியா கலந்துகொண்டார்.
இதில் நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்பின் ஆலோசகர் ஏ.ஆர்.எம்.அஷ்ரப் நளீமி, சம்மாந்துறை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.பைஸல், மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்பின் தலைவர் என்.றுஸான், பஸ்பெக் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.சதாம், உலமாக்கள், உள்ளிட்ட பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மார்க்கசொற்பொழிவை சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்ரூப் மதனி நிகழ்த்தினார்.