Ads Area

புகைத்தல், போதைப்பொருள் பாவனையை முற்றாக தடை செய்ய சம்மாந்துறை பிரதேச சபையில் தீர்மானம்.


(எம்.எம்.ஜபீர்)
எமது பிரதேசத்திலுள்ள சமய ஸ்தலங்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை பிரதேசத்தில் 
போதைப்பொருட்களை முற்றாக தடை செய்ய பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக  சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறையை உருவாக்கும் வேலைத்தினை முன்னெடுக்கும் பொருட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷாத் ஏற்பாடு செய்த ஊடாகவியலாளர் சந்திப்பு நேற்று சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சமய நிறுவனங்கள், பள்ளிவாசல் நிருவாகம், ஜம்மியத்துல் உலமா சபை, கோவில் நிருவாகம் அனைவரின் வேண்டுகோள்களை உள்வாங்கி எமது பிரதேசத்தில் இன்று பாரிய சவாலாக இருக்கின்ற புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு  சம்மாந்துறை பிரதேச சபையின் 5ஆவது அமர்வின் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த அமர்வின் இந்த முயற்சியை பிரதேச சபை, நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, கோவில் நிருவாகம், மக்கள் பிரதிநிகள் ஒவ்வொரு கிராமமாக, கிராம சேவை பிரிவிலும் சகல உத்தியோகத்தர்களையும் உள்வாங்கி முதல்கட்டமாக ஒரு குழுவினை அமைத்து வீடு வீடாக சென்று விளிப்பூட்டல் மேற்கொள்ளுவதுடன்,  போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களை  இனங்கண்டு போதைப்பொருள், மது விற்பனை நிலையங்கள் என்பவற்றை தடைசெய்யவும்   பொது இடங்களில் புகைத்தலை   முற்றாக தடைசெய்து போதைப்பொருள் வியாபாரத்தை   சபையின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டடுள்ளதாகவும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe