Ads Area

T-Shirt (டீ-சேட்) வடிவமைப்பாளர்களுக்கோர் அரிய சந்தர்ப்பம் தவற விடாதீர்கள்.

எமது சம்மாந்துறையின் மிகப்பெரும் பொக்கிஷங்களில் சம்மாந்துறை தேசிய பாடசாலையும் ஒன்று என்பது நாம் யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட எமது பாடசாலையைக் கெளரவிக்கும் வகையில் கற்றுத்தந்த அன்னைக்கு சில காலடிகளாவது காணிக்கை செய்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபவணி (Walk) ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை எமது பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் இந்நடைபவணிக்கென்றே உத்தியோகபூர்வமான T-Shirt ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. அந்த வகையில் வடிவமைப்பாளர்கள் (Designers) ஆகிய உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான மாதிரி T-Shirt வடிவமைப்புக்கள் (Designs) எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உங்களால் வடிவமைத்து அனுப்பப்படும் T-Shirt Designகளுள் அதிசிறந்த T-Shirt Design எமது Walkற்கான உத்தியோகபூர்வ T-Shirtஆக தெரிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதுடன் அதனை வடிவமைத்தவருக்கு பெறுமதி வாய்ந்த சன்மாணங்களை வழங்குவதாகவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

T-Shirt 

1. பொதுவாக காடசாலை Walkற்கு பயன்படுத்தக்கூடிய அமைப்பில் வடிவமைக்கப்பட வேண்டும்.
2. பாடசாலையின் வண்ணமான Maroon Color உள்ளடக்கப்பட வேண்டும்.
3. Past Pupil’s Association 
4. STR/Muslim Madhya Maha Vidyalaya
5. PPA Logo என்பன இடம்பெற வேண்டும்.


எனவே உங்களால் வடிவமைக்கப்படும் T-Shirt Designகளை JPEG வடிவில் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் ppammmv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 27 ஜூலை 2018ற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதுடன் உங்கள் வடிவமைப்பு வெற்றி பெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய மாணவர் சங்கம்.
முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe