SWDC இன் கல்வி அபிவிருத்திப் பிரிவால் முன்மொழியப்பட்ட உயர்தர உயிரியல் விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவு மாணவர்களுக்கான Total Interactive Learning System கடந்த 20/07/2018 அன்று அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது SWDC யின் உப தவிசாளர் Prof Rameez Abdullah, மற்றும் செயலாளர் Farvis Mahroof, கல்வி அபிவிருத்திப் பிரிவின் தவிசாளர் Mahir, செயலாளர் Safir ஆசிரியர், Nizardeen ஆசிரியர் , மற்றும் பாடசாலை அதிபர் Jafir உட்பட பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது SWDC இனால் Eng M. I. Jamaldeen இன் வழிகாட்டலிலும் , மேட்பார்வையிலும் தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகம் (Work Book) அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் இத்திட்டம் எதிர்வரும் வாரங்களில் சம்மாந்துறை தேசிய பாடசாலையிலும் அமுல்படுத்தப்பட உள்ளது.
இத் திட்டம் பற்றிய மேலதிக விபரங்களை அறிய கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.