சம்மாந்துறையைச் சேர்ந்த 1989ம் ஆண்டு பிறந்த நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் 250க்கும் அதிகமான அங்கத்தவர்களை உள்ளடக்கி '89 Born எனும் பெயரிலான அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக இயங்கிக்கிக்கொண்டிருக்கின்றது.
இவ்வமைப்பின் ஒன்றுகூடலும் T-Shirt வெளியீடும் எனும் தலைப்பிலான நிகழ்வொன்று கடந்த 2018.08.25ம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் Dr.என்.எம். ஹாலிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டில் உள்ள 45 அங்கத்தவர்கள் நேரடியாகவும் மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் அங்கத்தவர்கள் facebook நேரலை ஊடாகவும் இந்நிகழ்வில் பங்குபெற்றினார்கள்.
இந்நிகழ்வில் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பாக தலைவரினால் தெளிவு படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செயலாளர் ஆ. இர்ஷாத் அவர்களினால் அமைப்பின் யாப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது மேலும் இந்நிகழ்வில் அங்கத்தவர்கள் அனைவருக்குமான T-Shirt உம் வெளியிட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



