Ads Area

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி.

சென்ற 25.08.2018 ல் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி மற்றும் கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை செந்நெல் ஸாகிறா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வு தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் S.M.ஜெலீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்விற்கு  பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா. விசேட அதிதியாக சம்மாந்துறை பொலீஸ் அதிகாரி MR.அதான். சிறப்பு அதிதியாக சம்மாந்துறை உடற்கல்வி. உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.முஷ்தாக் அலி அதிதிகளாக இஸ்பா சமூக நலன்புரி அமைப்பின் தலைவி ஏ.எல்.பழீலா. றொஸான் சமூக சேவை அமைப்பின் தலைவி எம்.ஐ சித்தி பரீதா. ஐக்கிய மகளிர் சமூக சேவைகள் அமைப்பின தலைவி எம.டி.செய்நம்பு. அறபா மகளிர் அமைப்பின் தலைவி ஏ.வி.சம்சுன் நிஸா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படடது.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe