Ads Area

மாணவர்களுக்குத் தேவையான பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கல்வி எனும் அழியாச் செல்வத்தினை  மாணவர்களிடையே மெருகூட்டும் ஓர் அங்கமாக சம்மாந்துறை பிரதேச சபையின்  கௌரவ தவிசாளர் அல்ஹாஜ். ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். றிசாட் பதியுதீன் அவர்களின் அனுசரணையில் முதற் கட்டமாக 27.08.2018 அன்று  சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட விளினையடி  வட்டாரத்தின் கௌரவ உறுப்பினர் ஏ.எல்.எம். ஜிப்ரி சலீம்  அவர்களின் தலைமையில்   மிகவும் வசதி குறைந்த மற்றும் மாற்று திறனுடைய மாணவர்களுக்குத் தேவையான பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இவ் நிகழ்வில்  கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர்  யூ.எல். சமீம் மற்றும் சமூக சேவையாளன் ஏ.யாஸ்தீன் உட்பட அதிபர், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.




























Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe