Ads Area

சம்மாந்துறை வரலாற்றில் முதல் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தெரிவாகியுள்ள வீரர்.

சம்மாந்துறையானது பல் வகைத் துறைகளில் வளர்ச்சியடைந்து மக்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்ற ஒரு ஊராகும் அந்த வகையில் தற்போது சம்மாந்துறையானது விளையாட்டுத் துறையிலும் முன்னேறி வருவதனை அவதானிக்க முடிகின்றது.

சம்மாந்துறையில் உதைப்பந்தாட்ட அணிகள், கிரிக்கெட் விளையாட்டு அணிகள் என பல் துறை விளையாட்டுக் கழகங்கள் சம்மாந்துறை விளையாட்டுத்துறையில் தங்களது பங்களிப்பினை செய்து வருகின்றார்கள்.

இந்த  வகையில் சம்மாந்துறையைச் சேர்ந்த உதைப்பந்தாட்டப் பிரியரான தானிஸ் மொஹமட் என்ற சகோதரர் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தினால் C அங்கீகாரம் பெற்ற உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தெரிவாகி சம்மாந்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

சம்மாந்துறை வரலாற்றில்  C தர அங்கீகாரம் பெற்ற முதல் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தற்போது இவரே விளங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe