மக்களின் பாதுகாப்பு நலன் கருதி நாடளாவிய ரீதியாக அமைக்கப்படும் லங்கா சதொச நிறுவனம் அனைத்து சமூக மத்தியிலும் பெரும் வரவேற்பைத்தரும் ஒரு விடையமாக காணப்படுகிறது.
கடந்த காலங்களின் வரலாற்றை பார்க்கின்ற போது அரசின் முக்கியமாக திகழும் வர்த்தக அமைச்சின் லங்கா சதொச நிறுவனம் ஒரு முன்னேற்றகரமற்ற ஒன்றாகவே காணப்பட்டது. இதனால் அரசுக்கு எதிர்பார்த்த இலாபகரத்தை பெற்றுக்கொள்ள முடியாத ஓர் சூழல் உருவானதை நாம் கண்டுகொள்ள கூடியதாக இருந்தது.
இதனடிப்படையில் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் குறிப்பிட்ட அமைச்சை ஏற்றதன் பின்னர் அமைச்சில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பாரிய மாற்றத்தையும், இலாபகரத்தையும் கண்டுகொள்ள கூடியதாக அமைந்ததுடன் இதனால் அரசுக்கு பலத்த கோடிக்கனக்கான இலாபத்தை பெறக்கூடிதாக அமைந்தது.
இதன் அடிப்படையில் நுகர்வோர் பாவனையாளர்கள் நலன் கருதி நாடளாவிய ரீதியாக அமைக்கப்படும் லங்கா சதொச நிறுவனம் எனும் வேலைத்திட்டத்தில் எமது சம்மாந்துறை பிதாமகன் , தென்கிழக்கு பிராந்தியத்தின் சிந்தனையாளர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களின் அயராத முயற்சியாலும், அவரது தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையிலும் எமது செந்நெல் கிராமத்தில் பௌஸ் மாவத்தை வீதியில் லங்கா சதொச நிறுவனம் கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களினால் நிறுவப்பட்டது .
இதன் அடிப்படையில் இவற்றினை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் வைபோகம் மிகவிமர்சியாக பிரதம அதிதி எமது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன் போது மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு பொதிகளும் பாராளுமன்ற உறுப்பினர் வீசி இஸ்மாயில் அவர்களினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எமது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களின் பிரத்தியேக செயலாளர் ULM. சமீம், பிரதேச சபை உறுப்பினர் றியாஸ், சலீம் வட்டான ,வேட்பாளர்கள் நியாஸ்தீன், நிஸாம் , சட்டத்தரணி சிபானா , லங்கா சதொச முகாமையாளர்கள் , கட்சி ஆதர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.














