Ads Area

மன்சூர் எம்பியின் முயற்சியால் சம்மாந்துறை ஆண்டிட சந்தியிலிருந்து சமிட்புரம் செல்லும் வீதி புணரமைப்பு.

அன்சார் காசீம்.

38 வருடகாலமாக புனரமைக்கப்படாமலும், மக்கள் பாவணைக்குதவாமலும் மூடிக்கிடந்த சம்மாந்துறை ஆண்டிட சந்தியிலிருந்து சமிட் புரத்திற்கு செல்லும் பிரதான வீதி மற்றும் வாய்கால் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வும், சமிட்புரத்தினையும் செந்நெல் கிராமத்தினையும் இணைக்கும் விவசாயப் பாலநிர்மாணிப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.

இப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாகயிருந்த இத்திட்டத்தினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கென நீர்ப்பானச மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் நீர்ப்பாசனத்திணைக்களம் 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதிகளாகவும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் கௌரவ அதிதியாகவும், அம்பாறை பிராந்திய நீர்ப்பானத் திணைக்கத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் கே.டி.நிஹால் சிறிவர்த்தன விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை கனரக இயந்திரத்தின் மூலம் ஆரம்பித்து வைத்து விவசாயிகளின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

இப்பாதை புனரமைப்புச் செய்து பாலம் அமைப்பதன் மூலமாக பொதுமக்களும், விவசாயிகளும் சம்புமடு, செந்நெல் கிராமம், உடங்கா1,2, மலையடிக்கிராம், தென்னம்பிள்ளைக் கிராமம், 20 மற்றும் 40 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்களுக்கு மிக இலகுவாக போக்குவரத்தினை மேற்கொள்வதோடு, இதன்மூலம் இக்கிராமங்களில் வாழ்ந்துவரும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் எம்.எம்.ஆசீக், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், நீர்ப்பானத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe