முஜீப் ரஹ்மான்.
சம்மாந்துறை திறாஸதுல் இஸ்லாமிய்யா அரபுக் கலாசாலைக்கு நேற்று (11) விஜயம்செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலாசாலை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கலாசாலைக்கு புதிய கட்டிடம் மற்றும் அங்கு நிலவும் ஏனைய பெளதீக வள தேவைப்பாடுகல் குறித்து நிர்வாகிகள் தலைவருடன் கலந்துரையாடினார்.
இதேவேளை தலைவரின் தாயார் மர்ஹூமா ஹாஜரா ரவூப் அம்மையாருக்கு விசேட துஆப் பிரார்த்தனையொன்றும் கலாசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் தப்லீக்குல் இஸ்லாம் அரபுக் கலாசாலைக்கும் விஜயம்செய்த தலைவர் அங்குள்ள நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட அரபுக் கலாசாலை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.