எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் நாபீர் பெளண்டேசன் எந்த கட்சியில் களமிறங்கினாலும் தங்களது ஆதரவினை முழு மூச்சுடன் பெளண்டேசனுக்கு வழங்குவதாக கட்டார் வாழ் சம்மாந்துறை இளைஞர்கள் உறுதியளித்துள்ளனர்.
குறித்த விடயம் சம்பந்தமாக நேற்று 10.11.2018 கட்டார் நாட்டில் நபீர் பெளண்டேசனுக்கும் கட்டாரில் தொழில் புரியும் இளைஞர்களுக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பின் பொழுதே மேற் கண்டவாறு சம்மாந்துறை இளைஞர்களால் உறுதி மொழி வழங்கப்பட்டது.
மேலும் குறித்த சந்திப்பில் கடந்த காலங்களில் தங்களுக்கு அரசியல் கட்சிகளினால் இளைக்கப்பட்ட அநீதிகள் சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்ட்துடன், தேர்தல் அறிவிக்கப்பட்டதுடன் நேரடியாக தேர்தல் களத்திற்கு வந்து சொந்த நிதியிலிருந்து களப்பணி செய்வதாகவும் வாக்குறுதி வழங்கினார்கள்

