சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படுகொலையோடு தொடர்பு பட்ட 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொல்வதற்கு தங்களது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரே உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்ட கஷோக்ஜியை மீண்டும் சவுதிக்கு அழைத்து வருவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக அந்த அதிகாரி நியமிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.