Masihudeen Inamullah
சமகால அரசியல் நெருக்கடி அரசியலமைப்பு நெருக்கடியாக சூடு பிடித்துள்ளது, நாட்டின் பிரதான ஆட்சிக் கட்டமைப்புகளான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, சட்டமியற்றும் பாராளுமன்றம், உயர்நீதிமன்றம் (நீதித்துறை) என்பவை எவ்வாறு நெருக்கடியைக் கையாளுகின்றன என்பதனை முழு தேசமும், சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.
நேற்று பாராளுமன்ற அமர்வு அமளி துமளியுடன் ஆடி அடங்கியது…
எனக்கு மந்திரி பதவியோ, பிரதமர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ முக்கியமில்லை, பொதுத் தேர்தல் ஒன்றே தேவை, தேசத்தை பாதுகாக்க இதனை இடைக்காலத்தில் பரமேடுத்துள்ளேன் என மஹிந்த ஆக்ரோஷம்..
நேற்று முன்தினம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடை நிறுத்தி பெறப்பட்ட வாக்குகள் செல்லுபடியாகா என ஜனாதிபதி அறிவிக்க, ஜனாதிபதியின் நடவடிக்கைகள் செல்லுபடியாகா என சபாநாயகர் சுடச் சுட பதில் அனுப்புகிறார்..
மாலை லிப்டன் சுற்று வட்டத்தில் சூடுபிடித்து கூடிக் கலைந்தது ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் வெள்ளம்..
ஜனாதிபதி ஐக்கியதேசிய முன்னணியை பேச்சுக்கு அழைக்கிறார் அங்கு சபாநாயகர் உற்பட ஐக்கியதேசியக் கட்சி பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு..
பாராளுமன்றத்தில் முறைகேடாக நடந்து கொண்ட சகல தரப்புக்கள் மீதும் ஜனாதிபதி கண்டனம், அதற்கு அவரே காரணம் என மந்திரிகள் விசனம்..
பாராளுமன்ற நிலயியல் கட்டளைகளுக்கு ஏற்ப பெரும்பான்மையை நிரூபியுங்கள் ரணில் அல்லாத ஒருவரை பிரதமர் பத்வியிற்கு சிபாரிசு செய்யுங்கள்…என ஜனாதிபதி அறிவுறுத்தல்..
மஹிந்த அணியின் அனுமதியின்றி ஜனாதிபதி முடிவுகள் எடுக்கப் போவதில்லை, அவர்களுக்கு பொதுத் தேர்தல் ஒன்று தான் அவசியம்…
ஜே வீ பீ யும் பொதுத் தேரதல் ஒன்றிற்கு உடன்படின் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு ஆதரவளிக்க தயாராம்…
தமிழர் தேசியக் கூட்டணி தமது நிகழ்ச்சி நிரலை முனவைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு…
ஐக்கிய தேசியக் கட்சியின் தயவில் இருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவளிப்பதை தவிர வேறு வழியில்லை… (வ/கி ஒரு பொருட்டில்லை)
அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூடி ஆராய்வு, சஜித் பிரதமரானால் ரணிலுக்கு என்ன…?
ரணில் ஜனாதிபதி வேட்பாளர் (ரணில் மனைவி மைத்திரி பொது வேட்பாளர்..?)
சஜித்தை பிரதமராக்கினால் கட்சி அவரிடம் முழுமையாக போய்விடும் என ரணில் அச்சம், லிப்டன் சுற்று வட்டத்தில் சஜித்துடைய பேச்சு அச்சத்தைக் கூட்டியுள்ளது..கூடியவர்களும் மத்திய கொழும்பு பிரேமதாச ஆதரவாளர்கள்..
அப்படி என்றால் இடைக்கால பிரதமராக சஜித் இருக்கட்டும் மஹிந்த மற்றும் ஜே வீ பி இனர் கேட்பது போல் விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்வோம்…
ஆனால், ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நேரத்தில் வைத்தால் ரணில் சஜித் அதிகார இழுபறியிற்கு தீர்வு வரலாம் என ரணில் தரப்பு ஆர்வம்…
அதன் வெளிப்பாடாக லிப்டன் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கும் நாம் தயார், அதனை வைக்குமாறுசவால் விடுகிறோம் என (நேரடி மறைமுக) ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சவால்..!
ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் இரண்டும் ஒரே தடவையில் இடம் பெறுவதை மஹிந்த விரும்பலாம் ..அனால் மைத்திரியின் நிலை என்ன…?
பொதுத் தேர்தல் விரைவில் இடம்பெறுவதனை ஏற்றுக் கொண்டால் முறைப்படி மூன்றிலிரு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் விரைவில் கலையும்….இடைக்காலப் பிரதமர் சஜித்…
கூட்டாட்சியின்றேல் காபந்து அரசில் 30 கீழ் அமைச்சர்கள்… (கூட்டட்சியாயின் அதற்கு மேல்..).
ஜனாநாயகம், அரசியலமைப்பு, நீதித்துறை …. எல்லாம் சரிதான் ஆனால் தத்தமது கட்சி அரசியலுக்கு அவை சாதகமாக அமையனுமே…
எல்லாத் தரப்புக்களும் உள்ளேயும் வெளியேயும் உடன் பாடுகள் முரண்பாடுகளுடன் மந்திராலோசனை!
ஏதோ சைபர் உலகிலுள்ள புதிய தலைமுறை அரசியல் பாடம் கற்கிறது, ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் தனக்குரிய இடத்தை பெற்றுக் கொள்கிறார்..
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் செல்வாக்குப் பெறுகிறார்..! அவர் அவர் தான்! நல்லாட்சியை மூன்று வருடத்திற்குள் கேள்விக்கு உற்படுத்தியுள்ளார்! பொதுத் தேர்தலில் போட்டியிடாத ஒரு கட்சியின் தலைவராக நாட்டின் பிரதமாராக ஆகியுள்ளார்.
பொதுத் தேர்தல் வந்தால் பேரம் பேசல்கள் ஆரம்பமாகும்… !