Ads Area

டுவிட்டரின் (Twitter) ஆலோசகராக இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் நியமிப்பு..??


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் தொடர்ந்து இயங்குபவர். டுவிட்டரில் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் முக்கியமான நபராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியா வந்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சி, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசினார். இந்தியாவில் ட்விட்டர் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் பயன்படுகிறது.

அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்குள்ள முக்கிய பிரபலங்களிடம் கருத்து கேட்கவே வந்திருக்கிறார் ஜேக். கலைத்துறையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானை சந்தித்து பேசியுள்ளார். ரஹ்மானுடனான அவரது சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

டுவிட்டர் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருப்பதாகவும், இந்தியாவில் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேக் டார்சி, தன்னை சந்தித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “ஜேக் டார்சிவுடனான சந்திப்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe