தற்சமயம் முகநூலில் இவரைப்பற்றி கேலித்தனமாக பதிவிடும் முஸ்லிம்களே உங்களுக்காக ஒரு நிமிடம்..!
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமளி துமளியின் போது கையில் கைத்தியை வைத்துக் கொண்டு சண்டித்தனம் காட்டியதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
உண்மை தான்..! எதிரணியினரின் அராஜக அரசியலுக்கு இப்படியான ஒரு தைரியசாலியை கொண்டிருப்பது ஐ.தே.கவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது.
சண்டிமல்லி என்று அழைக்கப்படும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும நான் கண்ட அரசியல் வாதிகளில் ஒரு மனித நேயம் மிக்கவராகவும், ஒரு சிங்களாவனாக இருந்து தர்கா நகர் இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கிய தலைவனாவும் திகழ்கின்றார்.
எந்த ராஜபக்ஷவுக்கும் அஞ்சாத வீரம்மிக்க தலைவன் இவன். அண்மையில் வியங்கலவில் வெள்ளம் ஏற்பட்ட போது தான் அரசியல் வாதி என்று நினைக்காமல் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி உயிர்காத்த வீரன்..!
தன்னுடைய மகன் 18 வயதில் புற்றுநோயால் உயிரிழந்ததை தொடர்ந்து, எல்லோரையும் மகன் போன்று பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மகன், புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்.
இப்படியான ஒருவன் மதுகம பிரதேசத்தில் இருப்பது, அங்கு சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வளவே பாதுகாப்பாக அமைந்திருக்கின்றது.
முஸ்லிம்களை நேசிக்கும் ஒருவராகவும், அவர்களை பாதுகாக்கும் ஒருவராகவும் இருக்கின்றார்.
தற்பெருமை என்கின்ற ஒரு குணம் இல்லாமல், சாதாரண மக்களை போன்று தனது வாழ்க்கையை நடாத்திவருகின்றவன்தான் இந்த பாலித..!
இவன் கத்தி அல்ல, நீதிக்காக கொலை கூட செய்ய தயங்காக வீரன்..!
A. Akeel Shihab (Sammanthurai)
Journalist