சவுதி அரேபியாவில் நீண்டகாலமாக இருந்த பெண்கள் வாகணம் ஓட்டுவதற்கான தடையை அண்மையில் சவுதி அரேபியாபின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நீக்கியிருந்தார் இதனால் தற்போது சவுதியில் பெண்களும் வாகணம் ஓட்டிச் செல்வதனை காணக் கூடியதாகவுள்ளது.
பெண்களுக்கு வாகணம் ஓட்டுவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றும் பல பெண்கள் வாகணம் ஓட்டுவதனை விரும்பாத நிலையில் இருப்பதனையும், சவுதியில் இடம் பெறும் வாகண விபத்துக்களின் அச்சத்தினாலும் சில பெண்கள் வாகணம் ஓட்டுவதற்கு தயங்கக் கூடிய நிலையினையும் அவதானிக்க முடிகின்றது.
வாகணம் ஓட்ட விரும்பாத பெண்கள் தங்களது போக்குவரத்துக்காக வீட்டுச் சாரதிகளை நியமித்திருப்பதுடன், Careem, Uber, private taxi போன்றவற்றினையும் இன்னும் பயண்படுத்தி வருகின்றனர்.
தற்போது சவுதி அரேபியாவின் Public Transport Authority (PTA) பல சட்டதிட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு பெண்களும் பெமிலி டெக்ஸி ஓட்டுவதற்கு அனுமதியளித்துள்ளது இதனால் சவுதி அரேபியாவில் சாரதிகளாக பணிபுரிபவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
மிகவும் அனுபவம் பெற்ற, தகைமை பெற்ற பெண் சாரதிகளுக்கு மாத்திரமே பெமிலி டெக்ஸி ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தகவல்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.