Ads Area

ஊட்டச்சத்து குறைபாட்டால் எமனில் மூன்று ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி.

எமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

எமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

எமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் எமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது.

Thanks - BBC News
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe