Ads Area

இலங்கை பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேயநாடுகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்திம் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர்,அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதேஇவ்வாறு கூறினர்

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அவர்களது நாட்டு பாராளுமன்றில் இடம்பெறும் இதுபோன்றவன்முறைகள் குறித்து வாய்திறக்காத தூதுவர்கள்இலங்கைவிடயம் என்றவுடன் முண்டியடித்து கருத்து வெளியிடுவதாகவும் குற்றம் கமத்தினார்தங்களது பிரச்சினை உலகிலுள்ளஎல்லா நாடுக ளிலும் இடம்பெறுகின்றன.ஆனால்இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு வலிக்கிறது.

அவர்களது நாடுகளின் பாராளுமன்றத்திற்குள் இவ்வாறானகுழப்பங்கள்சண்டைகள் இடம்பெறும் போது,அந்தந்த நாட்டுதூரதுவர்கள் கருத்துக்கள் எதனையும் வெளியிடுவதில்லை.

இலங்கை பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துகவலையடைவதாக சில மேற்கத்தேய நாட்டு தூது வர்கள்கருத்து வெளியிட்டுள்ளனர்கடந்த காலங்களில் அவர்களின்நாடாளுமன்ற அமர்வுகளிலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.அதன் போது,அவர்கள் அமைதியாக இருந்தனர்.

பாராளுமன்றத்திலிருந்தாலும்வெளியில் இருந் தாலும் நாம்எல்லோரும் மனிதர்கள்.அவ்வப்போது சிலஅசம்பாவிதங்களும் ஏற்படும்.என்றபோதிலும் 225உறுப்பினர்களும் எந் தவொரு சம்பவத்தையும்அனுமதிப்பதில்லை.எனினும் பாராளுமன்றில் சபாநாயகரின்பிழையான செயற்பாடுகளினால்சில அரசியல்தீர்மானங்களை எடுக்கும் போதுதமது ஆவேசத்தைகட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப் பங்களும்உண்டாகும்

சபாநாயகர் சரியாக செயற்பட்டுநிலையியற் கட்டளைக்குஅமைய செயற்பட்டு பாராளுமன்ற சம்பிரதாயங்களைப்பாதுகாப்பாராயின் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாதுஎன்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe