தகவல் - லக்ஸ்மி
பெண்களுக்கு உற்ற தோழியாக இருக்கிறது வெந்தயம். இந்த வெந்தயம் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலிகளுக்கு மட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் அதிகரிக்கவும் உதவுகிறதாம்.
பெரும்பான்மையான பெண்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை 6 மாதத்திற்கு முன்னர் கூட நிறுத்திவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு ஏற்படும் இந்த தாய்ப்பால் பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்பது பற்றி செய்த ஆராய்ச்சியில் வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டு பெண்களில் வெந்தய பவுடர் கலந்த தே நீரை பருகிய பெண்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து, காலையில் அந்த வெந்தய தண்ணீரை குடித்து வந்தால், தாய்ப்பால் அதிகரிக்கும்.
வெந்தயத்தை காய்ச்சிய தண்ணீரில் இட்டு, சிறிது நேரம் கழித்து வெந்தயத்தை வடிகட்டிவிட வேண்டும். இந்த தேநீரை பருகினாலும் தாய்ப்பால் அதிகரிக்கும்.
பேக்கரிகள் மற்றும் கடைகளில் வெந்தயம் ஸ்நேக்ஸாக கூட நல்ல சுவையுடன் கிடைக்கிறது. இதனை கூட பெண்கள் சாப்பிடலாம்.