2019ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா களுத்துரை மாவட்டத்தின் தர்கா நகரில் நடைபெறும் என முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (26.11.2018) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அத்துடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம்.மலிக், இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் ஸ{ஹைர் எம்.எச். தார் ஸைத், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் முஹம்மட் ஸாஹிட் ஸ{ஹைல் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.