தர்காநகரைச் சேர்ந்த சுலைமா சமி இக்பால் எழுதிய ‘உண்டியல்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று (25) மாவனல்லை வீனஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
எங்கள் தேசம் மற்றும் ப்ரபோதய சஞ்சிகை ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், பேராதனை பல்கலைக்கழக தமிழ்துறை பேராசிரியர் துரை மனோகரன், ஊடகவியளாலர்களான ராமன், அமீர் ஹுஸைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்