ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ச கூட்டணி ஏற்படுத்தியுள்ள மிக மோசமான அராஜக நிலையிலிருந்து நாட்டை நிரந்தமாக மீட்டெடுக்க வேண்டுமானால், முதலில் அவர்கள் இருவரினதும் அரசியல் சதியை தோற்கடிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அதனையடுத்து நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையொன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி அரசியல் சாசனத்திற்கு அமைய பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழும் மஹிந்த தரப்பையோ, கவலையில் இருக்கும் ரணில் தரப்பையே திருப்திப்படுத்த வேண்டிய தேவைஜே.வி.பி க்கு இல்லை. ஆனால் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல்சாசனத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஜே.வி.பி க்கு இருக்கின்றது. அதனாலேயேநாம் இந்த போராட்டத்தில் தலைமையேற்று செயற்பட்டு வருகின்றோம்.
“ஒக்டோபர் 26 ஆம் திகதி எமது நாட்டில் இடம்பெற்றது போல் மீண்டுமொருமுறை சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டால் மிகவும் மோசமான இரத்த ஆறுபெருக்கெடுப்பதை தடுக்கவே முடியாது போய்விடும்.
ஆனால் அதிஷ்டவசமான எமது நாட்டு மக்கள் மிக மோசமான சதியொன்றின் மூலம்ஆட்சி கவிழ்க்கப்பட்ட போதிலும், பொறுமையாக இருந்து ஜனநாயக ரீதியில் அதனைமாற்றியமைக்கும் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர். இதற்காக நாட்டு மக்களுக்குநாம் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு எதிராக தொழில்சார்நிபுணர்கள் மற்றும் புத்தி ஜீவிகளை அணிதிரட்டும் நோக்கில் ஜே.வி.பி நாடு தழுவியரீதியில் நடத்திவரும் கருத்தரங்கொன்று காலியில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.