இன்று SLMC பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் சம்மாந்துறை “S” வாய்க்காலை துப்பரவு செய்யும் பணியை மேற்பார்வையிட சென்றார்.
இதன் மூலம் சின்ன சாலம்பக்கேனி, பெரிய சாலம்பக்கேனி, நாவலடி, பனையடி, ஆத்தியடி வட்டை, வீரச்சோலை விவசாயிகள் எதிர் கொள்ளும் நீர் பிரச்சளைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் போது சென்ற வழியில் 20 ஆம் கொளணியில், கணவன் மனைவியான இரு முதியோர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
குறித்த வயோதிப தம்பதிகளின் வயது முறையே 87, 93 குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வயதிலும் தங்களது அன்றாட வேலைகளை அவர்களே செய்வதை பார்வையிட கிடைத்தமை மிகவும் பரவசத்தை உண்டாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் நிலமை சீரற்று காணப்படுகின்ற போதும், தனது மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி நிகழ்வுகளையும் மேற்பார்வையிடவும், மக்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் நேரத்தை ஒதுக்கியமையை சம்மாந்துறை மக்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.
"மூத்த போராளி"
