பாலசுப்ரமணியன்.
நீங்கள் காரில் ஏசி பயன்படுத்தும் போது காரை ஆப் செய்வதற்கு முன் ஏசியை ஆப் செய்ய வேண்டுமா?அப்படி செய்யாவிட்டால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா? என்ற எண்ணம் உங்களுக்கு எழுந்திருக்கலாம்.
பலர் பல விதமாக காரணங்களை சொல்லி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையை கையாள சொல்லி உங்களுக்கு அறிவுறுத்துவர். ஆனால் உண்மை என்ன? கார்களில் ஏசி தொழிற்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.
உங்கள் நண்பர்கள் பலர் காரின் ஏசியை அணைத்த பின்பு காரை ஆப் செய்ய சொல்லுவார்கள். அவர்கள் சொல்வது ஒரு வகையில் சரி தான். அவ்வாறு செய்வது நல்ல பழக்கம் தான். ஆனால் இந்த அறிவுரை என்பது பழைய பஞ்சாங்கம். நவீன கார்களில் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
காரில் உள்ள ஏசியை HAVC சிஸ்டம் என கூறுவர்கள் அதாவது ஹீட்டிங், வென்டிலேட்டிங், ஏர் கண்டிஷனர் என்பதன் சுறுக்கம் தான். கார்களில் ஏசி கொண்டு வரப்பட்டபோது அமைக்கப்பட்ட கம்பரஷர், கண்டென்சர், டிரையர், எவாப்பரேட்டர், எக்ஸ்பேன்ஷன் வால்வு, பிரஷர் சுவிட்ச், தெர்மோஸ்டாட், கண்டன்சர் மற்றும் எவாப்பரேட்டருக்கான புளோயர் ஆகியவற்றில் இதுவரை எந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் ரெப்ரிஜிரென்ட் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
முன் நாட்களில் ஆர்-12 என்ற ரெப்ரிஜிரென்ட் தற்போது ஆர்-134 என்ற ரெப்ரிஜிரென்டாக மாற்றப்பட்டுள்ளது. மற்றும் இந்த கருவிகளை இணைக்கும் சிறிய சிறிய பாகங்களும் மாற்றப்பட்டுள்ளது. இது தவிர சுமார் 10-15 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பெரும்பாலும் உங்கள் காரிலும் நவீன காரிலும் ஒரே மாதிரியான ஏசி தொழிற்நுட்பம் தான் இருக்கும்.
ஏசியில் உள்ள கம்பிரஷர் மெகனெட்டிக் கிளட்ச் எனும் கருவி மூலம் டிரைவ் பெல்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அது தான் இன்ஜினின் கிராங்சாப்டில் இருந்து பவரை ஏசிக்கு வழங்குகிறது.
கம்பிரஷர் அப்பொழுதும் ஆன்னிலேயே இருக்காது. இதை நாம் ஆன் ஆப் செய்ய வேண்டும். அப்பொழுது தான் காரின் வெப்ப அளவை நாம் விருப்பதிற்கு ஏற்ப வைத்து கொள்ள முடியும். அதனால் ஆதனா மெகனடிக் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
இது நீங்கள் கார் செல்லும் போது ஏசியை ஆன் செய்யவில்லை என்றால் கண்பிரஷனர் உடனான இணைப்பை துண்டித்து விடும். இதனால் நீங்கள் கார் ஓடினாலும் ஏசி ஓடாமல் தவிற்க்க முடியும்.
பழைய கார்களில் உள்ள இன்ஜினின் உதிரி பாகங்களான ஏசி கம்ப்ரஷர் மற்றும் ஏசி ஆல்டர்னேட்டர் சமீப காலங்களில் உள்ளதை போல சிறப்பாக செயல்படாது. அந்த கார்களில் ஏசியை ஆன் செய்தால் இன்ஜின் செயல்பாட்டில் பெரும்பாலான பவரை அதுவே எடுத்துக்கொள்ளும்,
ஆனால் அந்த ரக கார்கள் எடுத்துக்கொள்ளும் பவர் அளவு வேறுபட்டு கொண்டே இருக்கும். இந்த அளவு பவர் தான் அது எடுக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நவீன கம்பிரஷரில் சிறிய ரக கார்களில் 3 முதல் 5 எச்பி வரை பவரை எடுக்கிறது என டைனமோ மீட்டர் மூலம் அளக்க முடிகிறது.
இன்ஜின் ஸ்டாரட் ஆனவுடன் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வேகமாக இயங்காது. இன்ஜின் இயங்குவதற்கான வெப்ப நிலை எட்டியுடனே தான் அதன் முழு திறனும் வெளிப்படும். அதனால் அந்த சமயத்தில் இன்ஜினிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு தேவையில்லாத லோடும், அதன் வாழ்நாளை பாதிக்ககூடும்.
நீங்கள் ஏசியை ஆப் செய்யாமல் இன்ஜினை ஆப் செய்தால் மீண்டும் இன்ஜின் ஆன் செய்யும் போது ஏசி தானாக ஆனாகும் அது இன்ஜினிற்கு தேவையில்லாத லோடை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்
அதே போல் நீங்கள் இன்ஜினை ஆப் செய்துவிட்டு இக்னிஷியனை ஆப் செய்யாமல் விட்டு விட்டால் ஏசியில் உள்ள பேன்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கும். இது எலெக்ட்ரிக்கல் பவரில் இயங்குகிறது. இது தேவையில்லாத எலெக்ரிக்கல் சக்தி செலவு, இதனால் நீங்கள் இன்ஜினை ஆப் செய்யும் முன் ஏசியை ஆப் செய்து விடுங்கள்.
இதே பிரச்னை தான் காரில் உள்ள இன்போடெயின்மெண்ட் மற்றும் மியூசிக் சிஸ்டத்திற்கும் பொருந்தும். அதனால் நீங்கள் காரில் இன்ஜின் ஆன்னில் இல்லாத போது மியூசிக் சிஸ்டத்தையும் செயல்படுத்துவதை குறைக்க வேண்டும்.
உங்கள் காரின் பேட்டரி சிறப்பான கண்டிஷனில் இருக்கிறது. அது செலவாவதால் உங்களுக்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்றால் நீங்கள் அவ்வாறு பயன்படுத்தி கொள்ளலாம் எந்த வறும் இல்லை.
ஆனால் பேட்டரி மோசமான கன்டிஷனிலோ அல்லது மாற்ற வேண்டிய கண்டிஷனிலோ இருந்தால் அதாவது காலையில் நீங்கள் காரை எடுக்கும் போது பேட்டரி பிரச்னை உள்ள கார்களில் இவ்வாறு செய்யாதீர்கள் இது உங்கள் காரை எப்பொழுது வேண்டுமானாலும் நடுவழியில் நிறுத்திவிட கூடும்.