Ads Area

புயல் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க ரசிகர்களைக் களமிறக்கிய விஜய்..!

நடிகர் விஜய்யிடம் இருந்து புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து, கடலூர் மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் சீனுவிடம் பேசியபோது, ​​"இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் வங்கிக் கணக்கில் ரூ .4.50 லட்சம் பணம் வந்திருந்தேன், சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பிய பணம். நித க்காக அனுப்பிவைக்கப்பட்ட பணம். 

அதை மக்களுக்கு உதவுகின்ற வகையில் செலவு செய்யுமாறு விஜய் அனுப்பிவைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபோல, மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்க பாண்டியனின் வங்கிக் கணக்கிலும் 2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. 

விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை பல்வேறு ொருள்களாக மக்கள் பயனடையச் செய்வோம்.

நாகை தெற்கு மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் சுகுமாரரிடம் கேட்டபோது, ​​"கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தியுள்ளது, அது சீர்செய்யும் வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். உடன், ரூ .5 லட்சத்திற்கு நிவாரணப் பொருள்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பியிடப்படும். மக்களுக்கு வழங்குவதற்கு உதவுங்கள் என்று கூறினார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe