Ads Area

வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி-முல்லைதீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்,பாதுகாப்புத் தரப்பினர்,மதத் தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கவுள்ள தாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கின் சகல உட்கட்டமைப்பு வசதிக ளையும் துரிதமாக மேற்கொள்ளவென பாரிய செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe