அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து நாடுகளுக்குமாக ஒரேயொரு கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு அமைவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு என இதுவரை காலமும் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன் நிறுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வழங்கப்படும்.