Ads Area

இலங்கையில் உள்ள வித்தியாசமான அரசியல்வாதி பாலித தேவபெரும.

நேற்று (30) மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வாழ்வாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும அமைச்சர் அடங்கிய குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தினர். 

கிளிநொச்சியில் கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ள நீரினால் மூடப்பட்டு காணப்பட்டது. 

இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பரந்தன் பகுதியில் உள்ள கிணறுகளை மாலை வரை இக்குழுவினர் துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

மழை-வெள்ளம் ஏற்படுகின்ற போது குறித்த பிரதேசங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக நிண்று துப்புரவுப் பணிகளைச் செய்வது, மக்களோடு மக்களாக நிண்று அனைத்து நிவாரணப் பணிகளையும் முன்னெடுத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகளை அவர் இன்று மட்டும் செய்யவில்லை கடந்த காலங்களில் கூட இவர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe