Ads Area

போதையற்ற சம்மாந்துறை வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.



ஏ.ஜே.எம்.ஹனீபா.

போதையற்ற சம்மாந்துறை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொதுமக்களை விழிப்புணர்வவூட்டும் வேலைத்திட்டடத்தை சிறப்பாக முன்னெடுத்த கிராம சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்(17)சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதீதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து சிப்பித்தார். கௌரவ அதீதிகளாக கணக்காளர் திருமதி ஹுசைனா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஜீ.பீ.எம்.றஷாட்,கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.தாசீம் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது 15 உத்தியோகத்தர்கள் பாராட்டுகளை பெற்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe