மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
மிகவும் வறுமையில் நிலையில் இருந்து தனக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொள்ளும் நிமிர்த்தம் சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்ற பிலின்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவருக்கு அவரது பரிதாப நிலையினை அறிந்த சவுதி எஜமானார் அப் பெண்னுக்கு சொந்தமாக வீடு ஒன்றினை கட்டிக் கொடுத்து மனிதாபிமானமாக நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிலின்பைன்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அப் பெண் கருத்துக் தெரிவிக்கையில்,
நான் சவுதி அரேபியாக்கு வந்ததன் நோக்கம் வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளவே எனது நிலையினை அறிந்து கொண்ட எனது எஜமானார் எனக்கு வீடு ஒன்றினைக் கட்டித் தந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார் 31 வயது நிரம்பிய அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்.
அத்தோடு தனக்கு அந்த சவுதிக் குடும்பத்தினர் ஏராளமான பரிசுப் பொருட்கள் தருவதாகவும், தனது நோயுற்ற பிள்ளையொன்றின் மருத்துவத்துக்கும் உதவி புரிந்ததாகவும் அந்தப் பெண் பிலிப்பைன்ஸ் டைம்ஸ் க்கு மேலும் தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்.
உண்மையில் சவுதி அரேபியாவில் இப்படியான ஏராளமான நல்ல உள்ளம் படைத்த, தனது வீட்டுப் பணிப் பெண்களோடு, சாரதிகளோடு நல்ல இரக்கம் உணர்வோடு நடந்து கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.