ஆட்சி மாறுது, காட்சியும் கூடுது; இருந்த போதிலும் அலங்கரிப்படுகின்ற அரசாங்கத்தில் எமது நிலைப்பாடு என்ன என்பதை சிந்திப்பதும் காலத்தின் தேவையாகும்.
தெளிவில்லாத அத்துமீறல்களும், தெளிவான சட்ட ஏற்பாடுகளும் ……… தேள் கொட்டியது போல் வலம் வந்து கொண்டிருக்கும் எமது உள்நாட்டு அரசியலில், வெளிநாடுகளின் அழுத்தங்களையும் வெளியூர்களின் வியாக்கியாணங்களையும் வீரம் பேசுகின்ற அiடிமைகளாக எமது சமூகம் இருந்து விடக்கூடாது!
அதாவது, தற்போதைய கால சூழ்நிலையில் அரசியல் கெடுபிடி முழு இலங்கையையும் 50 நாட்களுக்கு மேல் ஆட்டிப்படைத்தது. ஆடிய அரங்கத்தில் அரசியல் ஞானிகளின் பலருடைய வியூகங்களும் ஜனநாயகத்தின் முன்னிலையில் தோற்றுப் போயின!
இது இறைவனின் வகுத்த விதி, அன்று முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளின் பெறுமதியை இன்று அப்பட்டமாக ஆட்சியாளர்களுக்கு புரிய வைத்துள்ளது. நெருப்பு வைத்தவராக சித்திரிக்கப்பட்டவரும் மண்டியிட்டார், நெருப்பு வைக்க சைகை கொடுத்து கைப் பிள்ளையாக இருந்தவரும் மண்டியிட்டார், இரண்டுக்கும் இடையில் செல்லப் பிள்ளையான ஒருவரும் மண்டியிட்டார்.
இதுதான் அரசியலின் சாகசம். இந்த விளையாட்டில் பந்துகளாக எறியப்பட்டவர்கள் மக்களன்றி வேறு யாருமே இல்லை. இனவாத கொடூரங்கள் எழுத்தக்களாலும், இரத்தங்களாலும், சேதங்களாலும் கரைபடிந்த சரித்திரங்கள் இன்று கதை பேசுகின்றன.
அவை ஒருபுறமிருக்க, ‘ஊரோடும் போது ஒத்து ஓடுனும்’ என்பார்கள் அதுபோல இரண்டும் ஒன்றுதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சி அரங்கேறிட்டு ஐந்தாவது முறையும் கைகளுக்கியாச்சு தள்ளி நின்று கைதட்டி பட்டாசு கொழுத்துபவர்களாத்தானா நாம் இருப்பது!
நாட்டைக் கொடுத்துவிட்டோம், ஜனநாயகத்தை மீட்டோம், நமது வீட்டை யார் பார்ப்பது!
சுருக்கமாக கூறுகின்றேன்… நான் கூற முனைவது இதுதான்!...
அனைவரும் அறிந்த விடயம் அம்பாறை மாவட்டத்தில் அதிகம் பெறுமதி வாய்ந்த ஊர் சம்மாந்துறை. இம் மண் பாராளுமன்ற பிரதிநிதியை இழந்து, மீண்டும் 10 வருடங்களின் பின்னரே தவமிருந்து பெற்றது. இருந்த போதிலும் முழு அமைச்சை தாங்கிய இந்த ஊரில் அரை அமைச்சாவது தரலாமல்லவா! (இக் கட்டுரை அரசியலுக்கு அப்பால்) தற்போது பலத்த கெடுபிடிக்கு மத்தியில் ஆட்சிபீடமேறியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையிலான அரசாங்கத்தில் மீண்டும் ஒரு அமைச்சரவை இன்னும் ஓரிரு தினங்களில் இடம்பெறவுள்ளது.
இந் அமைச்சரவையில் நியமனத்தில் பல்வேறு இழுபறி நிலை காணப்படுகின்றது. அதாவது, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் அமைச்சரவையை கொண்டுவர எத்தணிப்பதில் சில இழுகள் உருவெடுத்தவண்ணம் உள்ளன.
எது எவ்வாறு இருந்தாலும், எமது நாட்டைப் பொறுத்த வரையில் பொது மக்கள் தேவைக்காகத்தான் அரச நிறுவனங்கள் எல்லாம் 4.00 மணியுடன் ‘Close’. ஆனால், ஜனாதிபதி, அமைச்சர்களின் தேவைக்கு ’24 Hours Open’! {///இதுவும் ஜனநாயகம்தான்….///}
சரி, விடயத்துள் வருவோம்…
எனவே, இப்படி ஒரு சூழ்நிலையில் திடீரென அமைச்சரவை நியமிக்கப்படும். அதன் பின்னர் பிரதி, இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அமைச்சுக்கள் கட்சித் தலைவர்களின் சிபாரிசுகளின் படி அமையக்கூடும்.
வெறுமெனே பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல சாதனைகளை தீட்ட முடியாது. ஆகக் குறைந்தது அரை அமைச்சாவது இருக்க வேண்டும். இதற்கு சில உதாரணங்கள் எமக்கு 10 கி.மீ. தொலைவிலுள்ள ஊரைப் பார்த்தால் புரியும். (தெளிவாக கூறினால் பிரதேசவாதம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும், புரிந்து கொள்ளுங்கள்)
இந் நிலைமையில் ஆண்டாண்டு கால மு.கா.வின் அடிப்படை போராளியாக மிளிருகின்ற பாராளுமன்ற எம்.ஐ.எம். மன்சூர் அனைத்து வகைகளிலும் தலைமையினால் பரிந்துரைக்கப்படக் கூடியவர்.
மன்சூர் எம்.பிக்கு இந்த அமைச்சரவையில் ஒரு பிரதியமைச்சு வழங்கப்படவுள்ளதாக பலதரப்பட்ட தகவல்கள் விலாசுகின்ற போதிலும். அதை தடுக்க சில அக்னிச் சாஸ்திராதிகள் வில்லங்கம் செய்வதாக சில உள்வாரியான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
எது எவ்வாறாக இருப்பினும், சம்மாந்துறை மண்ணுக்கு இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அழகு பார்த்துக் கொண்டிருக்கும் நாம்! அரை அமைச்சையும் பெற்று அபிவிருத்திகளை சுளைபோடவேண்டும்.
இதற்காக அரசியல் பாகுபாடின்றி எமதூர் மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்கள் மு.கா. தலைவரிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.
காராணம் என்னவென்றால் இரு தலைமைகளுக்கும் சம்மாந்துறை வேப்ப மரத்தில் காய்த்த; வேப்பங் காயாகி விடக்கூடாது!
எனது ஊரின் வளர்ச்சியில்! எனது தனிப்பட்ட கருத்து இது!
~ ஊர் வாதமும் அல்ல! இனவாதமும் அல்ல!
✍️ கியாஸ் ஏ. புஹாரி