Ads Area

பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த நாட்களில் பல பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்றைய அமர்வில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி சம்பந்தமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe